நாத்திக அன்பர் ஒருவருடன் சமீபத்தில் நடந்த விவாதத்தின்போது, 'இறை நம்பிக்கை உடையவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள். ஆனால், நாத்திகர்களோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டவற்றை மட்டுமே ஏற்பார்கள்' என்ற ரீதியில் தன் வாதங்களை எடுத்து வைத்திருந்தார். அவரது இந்த இரண்டு வாதங்களுமே தவறு என்று எவ்வளவோ விளக்கியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
"இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதமல்ல நண்பரே. குர்ஆன் ஒரு அறிவியல் நூலல்ல என்றாலும், 'அத்தாட்சிகள்' என்ற முறையில் எத்தனையோ அறிவியல் உண்மைகள் அதில் சொல்லப்பட்டுள்ளன" என்றேன் நான்.
"உங்களைப் பற்றி தெரியாதா? எதையுமே குரானில் போட்டிருந்தால் ஏற்பீர்கள். குரானில் இல்லாவிட்டால் ஏற்க மாட்டீர்கள். இதில் என்ன அறிவியல் வாழுகிறது?" என்றார் அவர்.
"நண்பரே. இஸ்லாம் பற்றி நீங்கள் தப்பும் தவறுமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் விளக்கிச் சொல்ல நான் தயார். இஸ்லாமியக் கொள்கைகள் கற்பனையானவை என நீங்கள் செதுக்கி வைத்திருக்கும் மனப்பிம்பத்தினை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த விளக்கங்களை தெரிந்துக் கொள்ள நீங்கள் தயாரா?"
"தேவையில்லை. இஸ்லாம் குறித்து யார் எதிராக எழுதினாலும், அது இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் எழுதப்பட்டது என்பது இஸ்லாமியர்களின் தட்டையான சிந்தனைகளில் ஒன்று. இதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல. அதேபோல் குரான் கூறும் எதுவும் நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு மோதாது, அப்படி மோதியது என்றால் அது யூகமாக இருக்கும் என்பதும் உங்களின் தட்டையான சிந்தனைகளில் உள்ளது. எனவே, உங்கள் விளக்கங்கள் தேவையில்லை. நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல!"
அதோடு இந்த விவாதம் முடிவுக்கு வந்தது!
வேறு யாராவது இதுபோல எழுதியிருந்தார்களென்றால் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த நாத்திக அன்பர் 'இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே' தனது வலைத்தளத்தில் தொடர்க் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்! அடக் கடவுளே!
இஸ்லாமியர்கள் என்றால் தட்டையான சிந்தனை உள்ளவர்கள் என்று இவரே முடிவு செய்து கொள்வாராம். ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கை என்ன என்பதை ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் இவர் தெரிந்துக் கொள்ளகூட மாட்டாராம். ஆனால் அந்த முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையை இவர் தகர்க்கப் போகிறாராம். எங்கே போய் முறையிடுவது?
'நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல' என்று அவர் முகத்திலடிப்பதுபோலச் சொன்னாலும் நான் அதை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை. அவரது இன்னொரு பதிவில் விவாதத்தைத் தொடர்ந்தேன். அதைப் பற்றி அடுத்த பதிவில்..
Wednesday, May 12, 2010
Wednesday, January 13, 2010
இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள்: யாருக்கு யார் எதிரி?
இஸ்லாமின் அடிப்படைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமலேயே இஸ்லாமை 'அறிமுகம்' செய்ய முற்பட்ட தோழர் செங்கொடி, 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழியை பத்திக்குப் பத்தி நிரூபித்து வருகிறார்.
உண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி. குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:
”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை. அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.
"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (குர்ஆன் 15:9)
இவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால் அதை ஒருபோதும் சிதைக்க முடியாது. அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.
"...மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது..." - செங்கொடிபடைப்பினங்கள் அனைத்தையும், சைத்தான் உட்பட, படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்று. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சைத்தான் எப்படி அல்லாஹ்வுக்கே எதிரியாகி, அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கத்தை சிதைக்க முடியும்?
உண்மையில் ஷைத்தான் மனிதர்களுக்குத்தான் எதிரி. குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:
"உண்மையில் ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால் நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்." (35:06)அதுபோல, 'அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கங்கள் சைத்தானால் சிதைக்கப்பட்டன' என்பதும் தவறான கருத்துதான். இறைத்தூதர்களை அனுப்புதல், வேதங்களை வழங்குதல், மார்க்கத்தை ஏற்படுத்துதல், அதனை பாதுகாத்தல், அதில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் செய்யக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே.
”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்” என்று குர்ஆனில் (5:3) சொல்கிறான் அல்லாஹ். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களிலோ இப்படி ஒரு அறிவிப்பை அல்லாஹ் செய்யவில்லை. அப்படியென்றால், முந்தைய இறைத்தூதர்களின் காலத்தில் மார்க்கம் நிறைவு செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அடுத்தடுத்து வந்த இறைத்தூதர்களின் மூலம் இறைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இறுதி வேதம் குர்ஆன் மூலம் இஸ்லாம் முழுமைப் படுத்தப் பட்டு விட்டது.
"நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (குர்ஆன் 15:9)
இவ்வாறு, குர்ஆனை அருளிய அல்லாஹ்வே அதனை பாதுகாக்கவும் பொறுப்பேற்ற பிறகு, அல்லாஹ்வின் படைப்பான ஷைத்தானால் அதை ஒருபோதும் சிதைக்க முடியாது. அல்லாஹ் நாடினால், இஸ்லாம் அதன் தூய வடிவில் இறுதி நாள் வரை நிலைத்திருக்கும்.
Sunday, January 10, 2010
இஸ்லாம்: அறிமுகம் இல்லாமல் ஒரு அறிமுகம்!
"பிரதமர் மன்மோகன் சிங்கை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்"
"அடேடே...! அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு உங்களுக்கு பிரதமரை தெரியுமா?"
"எனக்கு அவரைத் தெரியாது.. அவருக்கும் என்னைத் தெரியாது.. இருந்தாலும் , வாங்க அறிமுகப் படுத்தி விடுகிறேன்"
இந்த மொக்கை ஜோக்கைச் சொல்லி இந்தக் காலத்தில் ஒரு எல்.கே.ஜி குழந்தையைக் கூட சிரிக்க வைக்க முடியாது. ஆனால் இதைப்போன்ற ஒரு விஷயத்தை சீரியஸாக சொல்ல முயன்றிருக்கிறார் செங்கொடி.
கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக் கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களி மண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. - செங்கொடிஅதாவது, முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோதே இஸ்லாம் தோன்றி விட்டது என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல என்கிறார் செங்கொடி.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னை ஒரு இறைத்தூதராக சொல்லிக் கொண்டது உண்மையல்ல; மாறாக அவர்தான் இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகர் என்கிறார் செங்கொடி.
எனில், இறைவேதம் குர்ஆன் அல்லாஹ் அருளியது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது உண்மையாக இருக்க முடியாது; அதை நபி (ஸல்) அவர்களே எழுதியிருக்க வேண்டும் என்பது செங்கொடியாரின் கருத்து.
கோடிக்கணக்கான முஸ்லிம்களின் நம்பிக்கையை மேற்கண்ட ஒரே வாக்கியத்தில் 'பொய்' என்று செங்கொடி மறுக்கிறார் என்றால்,
- ஆதம் (அலை) முதல் நபி ஈசா (அலை) வரையிலான இறைத்தூதர்களின் வரலாறுகளை அவர் அறிந்திருக்கவில்லை
- இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக, எதிரிகளால் கூட 'அவர் பொய்யர்' எனக் குற்றஞ்சாட்ட முடியாத அப்பழுக்கற்ற குணநலன்களைப் பற்றியும் செங்கொடி அறிந்திருக்கவில்லை.
- "இது மனிதர்களால் எழுதப் பட்டிருக்கவே முடியாது" என்று சொல்லத்தக்க பல ஆதாரங்கள் குர்ஆனில் இருப்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.
முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது. இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள். தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….
இப்பதிவின் தொடக்கத்தில் உள்ள ஜோக்கை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்!
Saturday, January 09, 2010
இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி!
செங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது.
அதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள். எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.
இது அவரது கட்டுரைத் தொடரின் 'நுழைவாயில்' பதிவில் கண்ட யோசனை. தொடரின் மற்ற பதிவுகளிலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான யோசனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடும். படித்து விட்டு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை.என்கிறார் செங்கொடி. இதை இவர் ஏன் செய்கிறாராம்? அதற்கும் அவரே பதிலளிக்கிறார்.
இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.அதாவது, இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் இந்துப்பாசிச வெறிக்கு பலியாகிறார்களாம். இந்துப்பாசிச வெறியைத் தடுக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பைத் தகர்த்து விட வேண்டுமாம்.
அதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள். எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.
இது அவரது கட்டுரைத் தொடரின் 'நுழைவாயில்' பதிவில் கண்ட யோசனை. தொடரின் மற்ற பதிவுகளிலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான யோசனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடும். படித்து விட்டு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
Tuesday, January 05, 2010
இஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்!
தமிழில் வலைப்பதிவுகள் வரத்தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே 'இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார' வலைப்பதிவுகளும் முளைத்து விட்டன. இந்த இஸ்லாமிய விமர்சகர்களில் பிரதான இடத்தை வகிப்பவர்கள் பார்ப்பனீய / இந்துத்துவ ஆதரவாளர்கள். அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் கிருஸ்துவ பதிவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகவாதிகள், பெண்ணுரிமைவாதிகள் போன்றோர்.
ஆனால், இவர்கள் வெளிப்படுத்தும் தங்களைப் பற்றிய அடையாளங்கள் உண்மையானதாகத் தான் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நாத்திகப் போர்வையிலோ, கிருஸ்துவப் பெயரிலோ எழுதுபவர் உண்மையில் இந்துத்துவவாதியாக இருக்கலாம்.
விமர்சகர்களின் பிண்ணனி எதுவாக இருந்தாலும் இஸ்லாம் பற்றிய அவர்களின் விமர்சனங்களில் ஒரு பொதுத் தன்மையைக் காணலாம். இஸ்லாமிலுள்ள குறைபாடுகள் என இவர்கள் கருதும் விஷயங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத சளைக்காத இவர்கள், அந்தக் குறைகளைக் களைய அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் அல்லது கொள்கை என்ன வழி காட்டுகிறது என்பதைச் சொல்வதேயில்லை.
கடைவீதியில் இரண்டு பேர் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலாமவர் 'இன்னின்ன வியாதிகளை எனது மருந்து குணப் படுத்தும்' என்று சொல்லி விற்பனை செய்கிறார். இன்னொருவரோ, 'அய்யய்யோ, அந்த ஆளோட மருந்தை வாங்காதீங்க. அதுல அந்த குறை இருக்கிறது.. இந்த குறை இருக்கிறது.. அதனால என்னோட மருந்தை வாங்கிட்டுப் போங்க' என்று சொன்னால் அதில் நேர்மை இல்லை. முதலாமவரின் மருந்து குறைபாடுடையது என்பதால் மட்டுமே இரண்டாமவரின் மருந்து சிறந்ததாக ஆகி விடாது. முதலாம் மருந்தை விட தனது மருந்தில் என்ன சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துச் சொல்லி விற்பதே முறை.
இஸ்லாமை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த இரண்டாம் (தர) மருந்து வியாபாரியாகவே இருக்கின்றனர்.

Thursday, July 14, 2005
குண்டு மனிதருக்கு வந்த கோபம்!
'விர்'ரென்று வேகமாக வந்து வளாகத்துக்குள் நுழைந்து 'கிரீச்'சென்று நின்றது அந்த கருப்பு வண்ணக் கார்.
ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டுப்பிறவி படாரென்று கதவை மூடிவிட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்தது. அரங்குக்குள் நுழைந்து மூச்சிரைக்க, கோபம் கொப்புளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டிஷர்ட் ஆசாமியை நெருங்கி, 'மொத்'தென்று விட்டார் ஒரு குத்து.
டிஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் இரத்தம்...!
'உனக்கு என்ன துணிச்சல்?' என ஆவேசமாக கத்தினார். சுற்றி இருந்தவர்கள் குண்டு மனிதரையும் டிஷர்ட் ஆசாமியையும் பிரித்து குண்டு மனிதரை குண்டுகட்டாக வெளியே தூக்கிச்சென்றனர். மீடியாவையும் பத்திரிக்கையாளர்களையும் சகட்டுமேனிக்கு திட்டிக்கொண்டே சென்றார் குண்டு மனிதர்.
திடீரென்று தன்னைப்பிடித்திருந்தவர்களை உதறித்தள்ளி டிஷர்ட் ஆசாமியை மறுபடியும் நெருங்கிய குண்டு மனிதர், 'இனிமேல் என் மனைவியைப்பற்றி ஒரு வார்த்தை எழுதினே... நடக்கிறதே வேறே..' என சுட்டு விரலை ஆட்டி மிரட்டினார்.
ஏன் இந்த ஆவேசம்? டிஷர்ட் ஆசாமி திரைப்பட நிருபராம். குண்டு மனிதரின் மனைவி ஒரு மாடலிங் நடிகையாம். இந்த மாதிரி நடிகைகளைக் குறித்து பொதுவாக எப்படி எழுதுவார்களோ, அப்படி அந்த மாடலிங் பெண்ணைப்பற்றியும் டிஷர்ட் ஆசாமி எழுதினாராம். இதனைப்படித்த குண்டு மனிதரின் மனம் புண்பட்டு விட்டதாம். ஆவேசத்துக்கு அதுதான் காரணமாம்.
அந்தக் குண்டு மனிதர் யார் தெரியுமா?
ஸல்மான் ருஷ்தி!
ஆம், 'சாத்தானிய வசனங்கள்' நாவலை எழுதி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயத்தை காயப்படுத்திய அதே ருஷ்திதான்.
தன்னுடைய லேட்டஸ்ட் நடிகை மனைவி குறித்து ஆபாசமாக எழுதிவிட்டானே என இந்தளவுக்கு ஆவேசப்பட்ட ருஷ்திக்கு, தன் 'சாத்தானிய வசனங்கள்' நாவலால் முஸ்லிம்கள் எந்தளவுக்கு துடித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்குமா? அறுபது வயது ருஷ்திக்கு 35 வயது மனைவி மீது இருக்கும் அன்பை விட கோடிக்கணக்கான மடங்கு அதிகமான இன்னும் சொல்லப்போனால் உயிரினும் மேலான நேசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு கொதித்துப்போய் இருப்பார்கள்? ருஷ்திக்கு உறைத்திருக்குமா?
தெரியவில்லை. ஆனால், கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் ருஷ்தியை அரவணைத்து, பாதுகாத்து இந்தப்பிரச்னையை சாக்காக வைத்துக்கொண்டு ஈரானுடன் பல்லாண்டுகள் தூதரக உறவுகளை முறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்ட மேற்கத்திய நாடுகள் ருஷ்தியின் ஆவேசத்தைக் கண்டு கொள்ளவில்லையே..! ருஷ்திக்கு எதிராக முஸ்லிம்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தியபோது கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிய ஊடகம் ருஷ்தியின் ஆவேசத்தை அமுக்கி விட்டதே..! ஏன்?
நன்றி: நம்பிக்கை ஜூலை 2005

Tuesday, July 12, 2005
சிறுகதை - வேண்டாத பிள்ளை!
('நம்பிக்கை' ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..)
அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் சடாரென ஒரு உற்சாகம் பிறக்க புத்தகப்பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். பத்து, பதினைந்து நிமிடங்களில் அந்த இடம் காலியாகி விடும். பள்ளி நடக்காத, சனி ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களிலெல்லாம் மாலை வேளைகளில் இந்த குழந்தைகளை கண்டு மகிழ்வது உதுமானின் ஒரு முக்கிய பொழுது போக்கு. பள்ளி விடுமுறை நாட்களில் நேரம் போவது அவருக்கு பெரும் சிரமமாக இருக்கும். எப்படா மீண்டும் பள்ளி திறப்பார்கள் என்று காத்திருப்பார்.
'காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!' என பெருமூச்சிட்டார் உதுமான். அவரது குழந்தைகளை இதே போல் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நாட்கள் அவர் நினைவிலாடியது. காலை நேர வகுப்பென்றால் ஏழு மணிக்கெல்லாம் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. ஐந்து நிமிட நடை தூரம்தான். பிள்ளைகளின் புத்தகப்பைகள்தான் எவ்வளவு கனமாக இருக்கும்! கொஞ்சம் தாமதமாகி விட்டால் அந்தப் பையையும் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைவார்கள். உதுமானும் அவர்களுடன் சேர்ந்து ஓட வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவரை எதிர் பார்க்காமல் சாலையை கடக்க இறங்கி விடுவார்கள். மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் அம்மா சல்மா போய் அவர்களை அழைத்து வருவாள். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு குர்ஆன் வகுப்பிற்கோ, டியூஷனுக்கோ போக வேண்டி இருக்கும். சல்மாவுக்குத்தான் அதிக அலைச்சல்.
உதுமானின் இரு மகள்களில் மூத்தவள் படபடவென்று வெகுளித்தனமாக பேசுவாள். மனதில் ஒன்றையும் மறைத்து வைக்கத் தெரியாது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் அந்த வெகுளித்தனம் மட்டும் மாறவேயில்லை. அவள் கணவருக்கு சவுதி அரேபியாவில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. புனித நகரான மக்காவுக்கு அருகில் உள்ள ஜித்தாவில் வேலை என்றதும் உடனே குடும்பத்துடன் புறப்பட்டு விட்டார்கள். உதுமானும், சல்மாவும் ஹஜ் யாத்திரை சென்ற போது அவர்கள் வீட்டில் போய் தங்கி விட்டு வந்தார்கள். அவர்களும் குடும்பத்துடன் இரண்டு வருடத்திற்கொருமுறை சிங்கப்பூர் வருவார்கள். மற்றபடி வாரம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார்கள்.
சின்னவள் மூத்தவளைவிட நான்கு வயது இளையவள். அமைதியான சுபாவம். படிப்பில் கெட்டி. கணிணி படிப்பில் ஆர்வம் கொண்டு படித்தாள். அவளுக்கு அமைந்த கணவரும் கணிணி வல்லுனர்தான். இருவரும் தற்போது கனடாவில் இருக்கிறார்கள்.
சின்னவள் பிறந்தபோது உதுமான் ஒரு நாணயமாற்று வியாபாரியிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றுலாப்பயணிகள் அதிகம் நடமாடும் இடத்தில் கடை இருந்தது. காலை எட்டு மணிக்கு போனால் இரவு ஒன்பது மணி வரை கை ஓயாத வேலை இருக்கும். சம்பளம்தான் போதுமானதாக இல்லை. ஆனால் கிடைத்த சம்பளத்தில் பொறுப்பாக குடும்பம் நடத்தும் திறமை சல்மாவிடம் இருந்தது.
இரண்டாவது மகள் பிறந்து மூன்று மாதமே ஆன நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. சல்மா மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக டாக்டர் சொன்னபோது உதுமானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக சந்தோஷப்பட வேண்டிய ஒரு செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்ததென்றால் அதற்கு காரணம் இருந்தது. அப்போதைய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இன்னொரு குழந்தையை பெற்று வளர்க்க தம்மால் முடியுமா என்ற கேள்வி அவர் முன் விசுவரூபமெடுத்து நின்றது. அது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரசவம் நடந்திருக்க, இன்னொரு கர்ப்பத்தை சுமக்க சல்மாவின் உடல்நிலை இடங்கொடுக்குமா என்பதும் அவரை மிக குழப்பத்தில் ஆழ்த்தியது.
மிகுந்த யோசனைக்கு பிறகுதான் உதுமான் அந்த முடிவுக்கு வந்தார். கர்ப்பத்தை கலைத்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. சல்மாவுக்கு இதில் உடன்பாடே இல்லை. வேறு எதற்காகவும் அவள் தன் கணவருடன் இந்தஅளவுக்கு வாதிட்டதேயில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.
சல்மாவுக்கு இருமுறை பிரசவம் பார்த்த அதே டாக்டரிடம் அழைத்துச் சென்று விஷயத்தை கூறினார் உதுமான். அவர்கள் மேல் அக்கறை கொண்ட அந்த டாக்டர் கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். உதுமான் வ்¢டாப்பிடியாக இருந்ததால் வேறு ஒரு டாக்டரிடம் பரிந்துரை செய்து அனுப்பி விட்டார்.
இந்த டாக்டர் ஒரு சீனர். உதுமான் சொன்னதை காது கொடுத்து கேட்ட டாக்டர் அவர் மேல் அனுதாபப்பட்டதாகத்தான் தோன்றியது. அதன் பிறகு கர்ப்பம் கலைப்பதைப் பற்றி அவர் விளக்கமாகச் சொல்லி 'நிறைய ரத்தமெல்லாம் வெளியாகும்' என்று சொன்னபோது உதுமானுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. 'யாரும் செய்யாததையா நாம் செய்கிறோம்' என்று ஒருவாறு சமாதானம் செய்து கொண்டார்.
பிறகு ஆபரேஷனுக்கு நாள் குறிப்பதற்காக ஒரு நர்ஸிடம் அவர்களை அனுப்பி வைத்தார் அந்த டாக்டர். அந்த தமிழ் நர்ஸ் சல்மாவின் முகவாட்டத்தைக்கண்டு விஷயத்தை ஒருவாறு விளங்கிக்கொண்டார் போலிருக்கிறது. சல்மாவிடம் அவர் ஆறுதலான தொனியில் பேச்சுக்கொடுத்தார். உதுமான் அந்த உரையாடலில் குறுக்கிடவில்லை. சல்மாவுக்கு இத்தகைய இதமான பேச்சு தேவைதான் என்று அவருக்கு தோன்றியது. ஆபரேஷனுக்கு தேதி குறித்தபின் அவர் சொன்னார், "இது நீங்க கணவன் மனைவி எடுக்க வேண்டிய முடிவு. இதுல நான் மூன்றாம் மனுஷி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனா, நல்லா யோசனை பண்ணிக்குங்க. ஒருவேளை மாறுதலான முடிவு எதுவும் எடுத்தீங்கன்னா இந்த தேதியில வராமெயே இருந்திடலாம். தேதி குறிச்சுட்டமே என்பதற்காக வர வேண்டியதில்லை." உதுமான் மனதில் இப்போது கலக்கத்துடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.
இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளில் தகுந்த ஆலோசனை வேண்டி உதுமான் நாடிச்செல்வது மெய்தீன் மாமாவிடம்தான். அவரை தொலைபேசியில் அழைத்து பேசியபோது தன்னையறியாமலே உதுமானின் குரல் தழுதழுத்தது. "ரொம்ப மனசைப் போட்டு குழப்பிக்கிட்டு இருக்காதே! நாளைக்கு உன்னை ஒருத்தர் கிட்டே அழைச்சுக்கிட்டு போறேன். உன் குழப்பம் தீர ஆலோசனை சொல்றதுக்கு சரியான ஆள் அவர்" என்றார் மெய்தீன் மாமா.
அடுத்த நாள் அவர் உதுமானை அழைத்துச் சென்றது ஒரு பள்ளிவாசல் இமாமிடம். சாந்தமான தோற்றம் கொண்ட பெரியவர் அவர். அஸர் தொழுகை முடிந்த பிறகு அந்த அமைதியான சூழ்நிலையில் அவரைச் சந்தித்தார்கள் அவ்விருவரும். உதுமான் அவரது பிரச்னையை விளக்கியபோது குறுக்கிடாமல் பொறுமையுடன் அவர் கேட்டுக்கொண்டிருந்த விதமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 'இவர் எனக்கு ஒரு நல்ல லோசனை சொல்வார்' என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டது.
பிறகு அந்த இமாம் சொன்னார், "தம்பி, நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லனும்னா, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு நீங்க எதையும் மறைக்காம உண்மையான பதிலை சொல்லனும். டாக்டர் கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொல்வாங்க இல்லியா, அது போலத்தான் இதுவும்."
"சரி" என்றார் உதுமான்.
"கர்ப்பத்தை கலைக்கணும்னு நீங்க நினைக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்ன?"
"அது.. வந்து.. இப்பத்தான் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசவம் ஆகியிருக்கு. உடனே மறுபடியும் கர்ப்பம்னா உடம்பு தாங்குமாங்கிற கவலைதான்!" தன் குரலில் தயக்கம் இருந்தது அவருக்கே தெரிந்தது.
"இன்னொரு கர்ப்பத்தை தாங்க முடியாதுன்னு டாக்டர் யாரும் சொன்னாங்களா?"
"டாக்டர் அப்படி சொல்லலை. உண்மையைச் சொல்லப்போனா 'கர்ப்பத்தை கலைக்காதீங்க'ன்னுதான் சொன்னாங்க"
சற்று நேரம் மவுனமாக அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இமாம் சொன்னார், "தம்பி! கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணிப் பாருங்க! உங்க மனைவி மேல நீங்க வச்சிருக்கிற அக்கறையினால 'இன்னொரு கர்ப்பத்தை அவரால தாங்க முடியுமா?'ன்னு நீங்க கவலைப்படுறீங்க. ஆனா உங்களைவிட உங்க மனைவியின் உடல்நிலையைப் பற்றி நல்லா தெரிஞ்ச டாக்டர் 'கர்ப்பத்தை கலைக்க வேண்டாம்'னு அறிவுரை சொல்றாங்களே! அவங்க சொல்றதுதானே நியாயமா தெரியுது! அதுக்கும்மேலே உங்களோட கவலைக்கு குர்ஆன் விளக்கம் கொடுக்குது பாருங்க..."
'இதற்கெல்லாமா குர்ஆன் விளக்கம் கொடுக்கிறது!' என எண்ணினார் உதுமான்.
"அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை'. ஒரு பெண்ணால அடுத்தடுத்து இரண்டு கர்ப்பங்களை சுமக்க முடியாதுன்னா அப்படி ஒரு கஷ்டத்தை ஆண்டவன் எந்த பெண்ணுக்குமே கொடுத்திருக்க மாட்டான். சரிதானே?" என்று சொன்ன இமாம், உதுமான் யோசனை செய்யட்டும் என்பதற்காகவோ என்னவோ சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
உதுமானுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் அவர் இந்த முடிவுக்கு வருவதற்கு முக்கியமான காரணமான பொருளாதார சூழ்நிலைக்கு இவரால் என்ன தீர்வு அளிக்க முடியும்?
அவரது எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டது போல் இமாம் கேட்டார், "வேறு ஏதாவது பிரச்னை இருக்கா?" மிக தயக்கத்துடன் அவர் தனது பொருளாதார சூழ்நிலையையும், இன்னொரு பிரசவம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை தன் வருமானத்தைக்கொண்டு சமாளிக்க முடியாது என்பதாலேயே இந்த முடிவுக்கு வர நேரிட்டதையும் சுருக்கமாக சொன்னார்.
"தம்பி! உங்க நிலைமை எனக்கு புரியுது. இதுக்கு நீங்க உதவி கேட்கவேண்டியது இறைவன் கிட்டேதான். அந்த இறைவன் சொல்கிறான், 'வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'. இன்னும் பிறக்கவில்லை என்றால்கூட கர்ப்பத்தில் இருப்பதும் ஒரு உயிர்தானே!. அதுவும் உங்கள் குழந்தைதானே!."
இதற்கு மேல் உதுமானுக்கு வேறு எந்த விளக்கமும் வேண்டியிருக்கவில்லை. ஆபரேஷனுக்கு குறிப்பிட்டிருந்த தேதியில் அவர்கள் மருத்துவமனைக்கு போகவில்லை. சல்மாவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.
****
வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. உள்ளே வந்தது உதுமானின் மகன் அப்துல்லாதான். பட்டமேற்படிப்பு முடித்து ஒரு அரசு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான்.
பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த உதுமான், சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதை கூட இவ்வளவு நேரம் உணரவில்லை. அவரது அருகில் வந்து ஆதரவாக அவரது தோளில் கை வைத்த அப்துல்லா அவரது முகக்குறிப்பை அறிந்தவனாக, "என்ன வாப்பா, டாய்லட் போகணுமா?" என்றான். அவனது கணிணி பையை கீழே வைத்துவிட்டு, சில ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் விளைவாக கை,கால்கள் உணர்விழந்து, பேசும் சக்தி இழந்து சக்கர நாற்காலியிலேயே காலத்தை கழித்துவரும் அவரை, கழிவறைக்கு நாற்காலியுடன் தள்ளிச்சென்றான். கழிவறை அருகில் வந்ததும் ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அவரை இருகைகளிலும் தூக்கிக்கொண்டு கழிவறையுள் நுழைந்தான். ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்த உதுமானின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

Subscribe to:
Posts (Atom)
அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!
அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...
-
இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?'...
-
அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...
-
செங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...