Tuesday, January 05, 2010

இஸ்லாம் எதிர் கொள்ளும் விமர்சனங்கள்!

தமிழில் வலைப்பதிவுகள் வரத்தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே 'இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார' வலைப்பதிவுகளும் முளைத்து விட்டன.  இந்த இஸ்லாமிய விமர்சகர்களில் பிரதான இடத்தை வகிப்பவர்கள் பார்ப்பனீய / இந்துத்துவ ஆதரவாளர்கள்.  அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் கிருஸ்துவ பதிவர்கள், கம்யூனிஸ்டுகள், நாத்திகவாதிகள், பெண்ணுரிமைவாதிகள் போன்றோர்.

ஆனால், இவர்கள் வெளிப்படுத்தும் தங்களைப் பற்றிய அடையாளங்கள் உண்மையானதாகத் தான் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  நாத்திகப் போர்வையிலோ,  கிருஸ்துவப் பெயரிலோ எழுதுபவர் உண்மையில் இந்துத்துவவாதியாக இருக்கலாம். 

விமர்சகர்களின் பிண்ணனி எதுவாக இருந்தாலும் இஸ்லாம் பற்றிய அவர்களின் விமர்சனங்களில் ஒரு பொதுத் தன்மையைக் காணலாம்.  இஸ்லாமிலுள்ள குறைபாடுகள் என இவர்கள் கருதும் விஷயங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத சளைக்காத இவர்கள், அந்தக் குறைகளைக் களைய அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் அல்லது கொள்கை என்ன வழி காட்டுகிறது என்பதைச் சொல்வதேயில்லை.

கடைவீதியில் இரண்டு பேர் மருந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  முதலாமவர் 'இன்னின்ன வியாதிகளை எனது மருந்து குணப் படுத்தும்' என்று சொல்லி விற்பனை செய்கிறார்.  இன்னொருவரோ, 'அய்யய்யோ,  அந்த ஆளோட மருந்தை வாங்காதீங்க.  அதுல அந்த குறை இருக்கிறது.. இந்த குறை இருக்கிறது..  அதனால என்னோட மருந்தை வாங்கிட்டுப் போங்க' என்று சொன்னால் அதில் நேர்மை இல்லை.  முதலாமவரின் மருந்து குறைபாடுடையது என்பதால் மட்டுமே இரண்டாமவரின் மருந்து சிறந்ததாக ஆகி விடாது.  முதலாம் மருந்தை விட தனது மருந்தில் என்ன சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துச் சொல்லி விற்பதே முறை.

இஸ்லாமை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த இரண்டாம் (தர) மருந்து வியாபாரியாகவே இருக்கின்றனர்.

1 comment:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அன்புள்ள சலாஹுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

////'அய்யய்யோ, அந்த ஆளோட மருந்தை வாங்காதீங்க. அதுல அந்த குறை இருக்கிறது.. இந்த குறை இருக்கிறது.. //// என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்கிறார்களே?

///முதலாமவரின் மருந்து குறைபாடுடையது என்பதால் மட்டுமே இரண்டாமவரின் மருந்து சிறந்ததாக ஆகி விடாது. முதலாம் மருந்தை விட தனது மருந்தில் என்ன சிறப்புத் தன்மைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுத்துச் சொல்லி விற்பதே முறை./// --மிகச்சரி.

ஆனால், தன் மருந்தை பற்றியோ, அதை உபயோகிப்பதால் அது எந்த அளவு அந்த நோயை போக்கும் என்றோ, குறிப்பாக தன் மருந்து இஸ்லாமிய மருந்தைவிட எந்தளவு சிறப்பானது என்றோ இதுவரை எவரும் ஆதாரப்பூர்வமாகவோ சொல்லவோ அல்லது வெற்றிகரமாக நடைமுறை படுத்திக்காட்டவோ இல்லையே?

///இஸ்லாமை விமர்சிக்கும் பெரும்பாலானோர் இந்த இரண்டாம் (தர) மருந்து வியாபாரியாகவே இருக்கின்றனர்/// - இல்லை. நான் சொன்ன மூன்றாம் தர மருந்து வியாபாரிகளாகவே இருக்கின்றனர். அட! அதுவுமில்லை.! சொல்லப்போனால் இவர்கள் எதையும் விற்பதில்லை, குறைமட்டுமே சொல்கின்றனர்.

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...