பள்ளிச்சிறுவர்களை அரும்பொருள் காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லும் வரலாற்று ஆசிரியை அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர் சொல்லும் தலைப்பிற்கேற்ற பதிலை தயாரித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார்.
"உங்கள் ஒவ்வொரு குழுவிற்கும் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களை பிரித்துத் தரப்போகிறேன். கேள்வி என்னவென்றால், 'உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கட்டம், இன்றைய நவீன உலகிற்கு என்ன பங்களிப்பை வழங்கியிருக்கிறது?' என்பதுதான்" என்று சொல்லும் ஆசிரியை, கிரேக்க, ரோம காலங்களுக்குப் பிறகான 'மத்திய கால'த்தை பெறப்போகும் குழுவிடம் "உங்களுக்குக் கிடைத்திருக்கும் 'மத்திய காலம்' ஒரு சவாலான காலக்கட்டம். ஏனெனில் இந்தக் காலத்தை வரலாற்றில் 'இருண்ட காலம்' என்று அழைக்கிறார்கள்" என்று சொல்லி அந்த மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து அனுப்புகிறார்.
நொந்த மனதுடன் அரும்பொருள் காட்சியகத்தின் 'மத்தியக் கால'ப் பிரிவைத் தேடிச் செல்லும் மாணவர்களுக்கு அங்கே ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கே அவர்கள் ஒரு மனிதரைச் சந்திக்கிறார்கள். ('காந்தி' படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி இந்தப் பாத்திரத்தில் தோன்றுகிறார்) அவர் 'இருண்ட காலத்தில் அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்புகள் இருக்கப் போகிறது?' என்ற அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் மாணவர்கள், அது உண்மையில் இருண்ட காலம் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறார்.
மத்தியக்காலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களுமான அல் ஜஸாரி, அல்ஹஸன் இப்னு ஹைத்தம், அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ், அபுல்காசிம் அல் ஜஹ்ராவி, மர்யம் அல் அஸ்துர்லாபி ஆகியோர் மாணவர்களின் கண் முன்னே தோன்றி அவர்களின் கண்டுபிடிப்புகளை விளக்குகிறார்கள்.
ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள். இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது. அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது. ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.
13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!
அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...

-
அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...
-
இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?'...
-
செங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...
2 comments:
அருமையான இடுகை சலா. எனது வலைப்பக்கத்தில் இதை இணைத்து விட்டேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர் உங்கள் ஆக்கங்கள் மிக அருமையாக உள்ளன. மாஷா அல்லாஹ்., உங்களோடு மேலும் தொடர்புக்கொள்ள உங்கள் mail id தரவும்.
இறை நாடினால் இனியும் சந்திப்போம்
Post a Comment