Wednesday, May 25, 2005

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?' என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் 'தினம் ஒரு ஸென் கதை)

"கோப்பையை காலி செய்"
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.

ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், 'நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?' என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.

'முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.

4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:

பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

5. முகமூடிகள் ஜாக்கிரதை:

இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

Comments:
சரியான நேரத்தில் பதியப்பட்ட மிக சரியான பதிவு. மிக தேவையான பதிவும் கூட. இஸ்லாம் தொடக்க காலம் தொட்டே எதிர்ப்புகளை சந்தித்து வந்திருக்கிறது. தமிழ் உலகில் இப்படிப்பட்ட நேரடி விவாதங்கள் நிகழ்வது எனக்கு தெரிந்தவரை இது தான் முதல் முறை. இதனைக் கொண்டு இஸ்லாத்தை பலர் சரியாக புரிந்துக் கொள்ள வாய்ப்புகள் பல உண்டு.
நிச்சயமாக இது இஸ்லாத்தின் மீதான புதிய தக்குதல் அல்ல. எனவே விவாதத்தில் ஈடுபடுவோர்-குறிப்பாக முஸ்லிம் சகோதரர்கள் உணர்ச்சி வசப்படாமல், முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை- தேவையானால் மார்க்க அறிஞர்களின் ஆலோசனை கேட்டபின் பதிவு செய்யும் பட்சத்தில் நேர்மையுள்ளோர் நிச்சயம் ஏற்று கொள்ளத்தான் செய்வார்.
இஸ்மாயில் , சிங்கை
 
நன்றி இஸ்மாயில், நேரம் கிடைக்கும்போது சவுத் பிரிட்ஜ் ரோடு ஜாமிஆ சூலியாவிற்கு வாங்களேன், சந்திக்கலாம்.

-சலாஹுத்தீன்
 
Appreciating you for a timely article.
Yes! Anybody wishes to discuss for anything they have to clearout their mind as mentioned in the zen story.

The nesakumars and other critics are entirely filled with hatred only and that also against Islam only - already in their thoughts and it reflects in their wordings.

We Should not forget that nandalaalaa's are having equal views on bothsides and they are more welcomeable for decent debates, though there are some false informations from them.

See some hindutva's are vulgarly attacking iSlamic personnels and nobody come forward to condemn it.

When Kaanchi film personally hits out Hindu personnels (even with evidence of recent matters), it seems to be these fanatics has no option expcept to attack ISlam with unlawful and vulgar means.
 
Babu,

Thanks for your comments. Baseless arguments will not be welcome by anyone. To entertain them is merely waste of time. At the same time muslims must be prepared to engage in healthy debates and discussions about Islam. I personally see this as a learning experience.

- Salahuddin
 
சல்மான் ருஷ்டி, தஸ்லீமா மற்றும் பலர் எழுதிய படைப்புகளெல்லாம் அவர்களை பிரபலப்படுத்தவில்லை. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றியபோது 'கெளரவ சிடிசன்சிப்' கொடுக்க மேலை நாடுகள் போட்டி போட்டன. மாறாக ஏனைய மதங்களை விமரிசிப்பவர்களுக்கு முஸ்லிம் உலகில் அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பதுதான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதவெறியர்களுக்கும் உள்ள வேறுபாடு. (பார்க்க: குறுகிய காலத்தில் பிரபலமாவது எப்படி?)

ஆரோக்கியம், நேசகுமார் போன்றோர் நிச்சயமாக ஒரு குழுவாக திட்டமிட்டு இஸ்லாத்தை தூற்றுகிறார்கள். அதற்குதான் 'தாரகை' பட்டங்கள்.

இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் வைக்கப்படும் போது இன்றைய முஸ்லிம்களில் உதாரணம் இல்லாமல் போனது நமது துரதிஷ்டம். குர்ஆன், ஹதீஸ் வழியில் தெளிவு படுத்த முயன்றாலும் கட்டுக்கதைகள், இக்காலத்திற்கு ஏற்றவையல்ல என ஒதுக்கும் பாரபட்சம்.

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பது நடுநிலையாளர்களுக்கு தெரியும். ஆக, இஸ்லாத்தின் மீதான் அவதூறுகளால் தங்கள் மூட கொள்கைகளுக்கு மருந்திட்டுக் கொள்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடு நிலையாக எழுதுவோம்.
 
//பழுத்த மரம்தான் கல்லடி படும் //

உண்மையான வார்த்தைகள்!
 
மிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்.
 
Rushdie and Taslima were well known much before the later contriversies.It was Midnights Children which propelled Rushdie
and Satanic Verses came later.
Taslima was known for her writings
that exposed the harsh realities.
Please dont try to distort facts
just because you hate both Rushdie
and Taslima.
Why is that women are barred from voting in some countries ruled in the name of islam.is it in conformity with islam.There is no need to beat around the bush in answering to this and be specific.
 
It was Midnights Children which propelled Rushdie
and Satanic Verses came later.

it should be
It was Midnights Children which propelled Rushdie to global
attention and praise.Satanic Verses came later.
 
Dear Wichita,

//Why is that women are barred from voting in some countries ruled in the name of islam.is it in conformity with islam.//

As far as I know, there are no restrictions in Islam barring women from voting. But I have no ready answer to your question,'Why is that women are barred from voting in some countries ruled in the name of islam'. Please also consider my comment: நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை.

In muslim countries such as Pakistan, Indonesia & Malaysia, muslim women have been prime ministers and ministers.
 
Thanks Wichita,

Because of your question I learnt something new. This is what I found:

"The Qur’an has prescribed the following principle in deciding about issues related to the collective affairs of the Muslims:

“Their (Muslim’s) affairs are decided through consultation among them” (Al-Shu’ra’ 42: 38)

One of the most important corollary of the above directive is that in all such collective issues where there is a difference of opinion among the Muslims because of which a unanimous decision cannot be arrived at, the opinion of the majority of the Muslims shall be made the collective law in a Muslim state.

As far as the issue of “voting rights” is concerned, the Qur’an in the same verse (Al-Shu’ra’ 42: 38) has clearly given the right of participating in the referred consultation to all Muslim citizens irrespective of the gender.

it is quite obvious that the Qur’an does not deprive women of voting rights. During the times of the Prophet and those that immediately followed, women normally stayed away from issues related to the state or those related to other collective issues. Thus, the issue of women’s voting rights never arose in those times. In contrast, today’s women, with their wider exposure have not only become more interested in political and collective issues but have also become active in these spheres. In these circumstances, there seems to be no basis of saying that Islam does not give voting rights to women."

Excerpts from: http://www.understanding-islam.com/rs/s-052.htm

- Salahuddin
 
தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்....
 
புலிப்பாண்டி தன் சுய அறிமுகத்தை ஏன் இங்கே பதிந்திருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை!
 
மிருக ஜாதியைச் சார்ந்த 'புலி' பாண்டியை இனி புலி பன்டி (பன்றி) என்றழைப்போம்.
 
இஸ்லாம் மற்ற மதங்களை மதிப்பதில்லையென்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதற்கு உங்கள் பதில் என்ன நண்பர்களே?

இளையவன்
 
இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் கொள்கையளவில் பெரும் வேறுபாடுகள் உண்டு. மற்ற மதங்களின் பெரும்பாலான கொள்கைகள் இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதால், அது மற்ற மதங்களை மதிப்பதில்லை என்று ஆகாது. தன்னை சந்திக்க வந்த ஒரு கிருஸ்துவ பாதிரியார் வழிபாடு செய்ய தனது பள்ளி வாசலிலேயே நபிகள் நாயகம் அவர்கள் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள்.

- சலாஹுத்தீன்
 
சலாஹுத்தீன்,

ராஜின் கருத்தையே பிரதிபலிக்கிறேன். நேச குமார், ஆரோக்கியம், இப்போது புதிதாக புலிப்பாண்டி, ஈரோடு இவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கும் மேலாக பலருடைய சொல்லடிகளையும் விமர்சனங்களையும் தாங்கி அதற்கு தகுந்த பதில்களையும் தந்து வளர்ந்தது தான் இஸ்லாமிய மார்க்கம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு இறைவேதம் மற்றும் நபிவழியில் விடையிறுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. உங்களில் எத்தனை பேர் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளீர்?
 
கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூதியைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.

இளையவன்
 
//கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூதியைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது//


இவையெல்லாம் ஒரு நாட்டின் அரசியலமைப்புக்கு காரணப்பட்டது என்று நினைக்கிறேன்.
துபாய் மற்றும் அல்பேனியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மையான நாடுகளில் சர்ச்சுகளும் கோவில்களும் உள்ளன.
அந்நாட்டின் அரசியலாளர்களால் தீர்மானிக்கப்படுகிற மதச்சார்பு தன்மையை பொறுத்தவை அவை.
ஆனால் மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே ஒரு மசூதியை இடித்திருக்கிறோம் நாம்.
 
நல்ல திரிதான். ஒரு மதத்தைப் பற்றி விளக்கும் நேர்மையான திரியாக இது திகழ எனது வாழ்த்துகள்.

இஸ்லாத்தைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது. ஆகையால் கேட்பதற்கும் ஒன்றுமில்லை.

இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு மிகுந்த வருத்தத்திற்குரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கண்டிப்பாக நடுநிலையாளர்கள் இத்தகைய நிகழ்வுகளை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். குரல் எழுப்பினார்கள். இன்னும் எழுப்புவார்கள்.

ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் ஒரு ஐயமுண்டு. ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி? காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது! அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன?

அன்புடன்,
கோ.இராகவன்
 
இளையவரே! (வேற யாரையோ அழைக்கிற மாதிரி இருக்கே, பரவாயில்லையா?)

//இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.//

இத்தகைய அரசியலமைப்பு தொடர்பான விஷயங்களை விளக்கும் அளவுக்கு நான் அறிந்தவனல்ல. ஒரு சில கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டி உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

- நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய நாடுகள் அங்கு பணிபுரிய வருவோரிடையே எந்த மத வேறுபாடும் காட்டுவதில்லை. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் திறமையின் அடிப்படையில் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். மற்ற மதத்தினரின் உரிமைகளை மறுக்கும் நாடு என்றால், 'முஸ்லிம்கள் மட்டும்தான் இங்கு பணி புரிய அனுமதி உண்டு' என்று சொல்லியிருக்கலாமே!

- உரிமைகளைப்பற்றி பேசும்போது, நமது தாய் நாட்டு குடிமக்கள் என்ற முறையில் பெறும் உரிமைகளுக்கும், வேறொரு நாட்டிற்கு பணியாற்ற செல்லும்போது அங்கு பெறும் உரிமைகளுக்கும் வித்தியாசமுண்டு என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

சலாஹுத்தீன்
 
ராகவன், உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி!

//ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி? காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது! அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன?//

நல்ல கேள்வி இது. ஆஃப்கானிஸ்தானின் அப்போதைய தலிபான் அரசு புத்தர் சிலைகளை இடித்தது வருத்தத்திற்குறிய ஒரு செயல்தான். பிறர் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள் என்று கட்டளையிடும் இஸ்லாம், அவர்கள் வணங்கும் புத்தர் சிலை போன்றவற்றை இடிக்கச் சொல்லியிருக்குமா? பிற சமூகத்தினருடன் இணக்கத்துடன் வாழும்படி இஸ்லாம் வலியுறுத்தியிருப்பதற்கு பல ஆதாரங்களை நாம் காட்ட முடியும்.

புத்தர் சிலை இடிப்பைப்பற்றி தலிபான் தலைவர் ஒருவர் கொடுத்திருந்த பேட்டியை இணையத்தில் படித்த ஞாபகம். (இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு குறிப்பிடுகிறேன். அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது).

அவர் சொல்லியிருந்தார்: தலிபான் அரசு பதவியேற்ற பிறகு நாட்டிற்கு அப்போதைய அவசியத்தேவையானவற்றை பட்டியலிட்டு திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். கல்வி வளர்ச்சி அவற்றுள் ஒன்றாக இருந்தது. அரசு இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற வெளி நாடுகளிலிருந்து நிதி உதவியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் வந்த வெளிநாட்டுக்குழு ஒன்று பல மில்லியன் டாலர் செலவில் புத்தர் சிலைகளை புணரமைக்க அனுமதி கேட்டது. அரசு அந்தப்பணத்தை கல்விப்பணிகளுக்காக தந்துதவும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த குழுவோ பிடிவாதமாக சிலைகளுக்காக மட்டுமே அந்த பணத்தை செலவு செய்ய முடியும் என்று கூறி மறுத்து விட்டது. இதனால் கோபமடைந்த தலிபான் அரசு சிலைகளை தகர்க்கும்படி உத்தரவிட்டது.
 
உங்கள் ஐயம் எனக்கும் வருகிறது. அந்த தாலிபான் அமைச்சர் சொல்லியிருப்பது ஒப்புக்காக இருக்கும். நாட்டு மக்கள் ஆதரவுக்காக இருக்கலாம். நம்மூரிலும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் அல்லவா. குதிரை பேரத்திற்காக ஆட்சியைக் கலைத்தோம் என்று.

ஆனாலும் அது துன்பியல் நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.

எனக்கு மற்றொரு ஐயம். பொதுவாகவே நம்மூரில் ஒரு பேச்சுண்டு. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடந்தால் இந்துக்கள் இந்தியாவிற்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்பதே அது. எனக்கு முஸ்லீம் நண்பர்கள் இல்லை. இருந்திருந்தால் அவர்களிடம் கேட்டிருப்பேன். இங்கே பெங்களூரில் பாகிஸ்தான் ஜெயித்த போது பட்டாசு வெடித்த ஓரிரு சமயங்களும் உண்டு.

நான் கேட்க வருவது...பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள்? காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன?
 
ராகவன்,

பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான்.

அதே நாம், இலங்கைக்கோ அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கோ ஆதரவாக பேசினால் அவர்களை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்?

பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்ததே தவறு என்பது எனது கருத்து. மேலும் அவர்களுடன் பிரிந்து சென்ற முன்னாள் கிழக்கு பாகிஸ்தானியர்களை அவர்கள் பாகிஸ்தானியராகவே பார்க்கவில்லை. விளைவு பங்களாதேஷ் தோற்றம்.

பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. இந்தியாவுடன் இருப்பதா அல்லது காஷ்மீருடன் இருப்பதா என முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான் என்பது எனது கருத்து.

இந்தியாவின் எந்த மாநிலமும் இந்தியாவிலிருந்து விலகக் கூடாது என்பதே எனது அவா.
 
//பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள்? காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன?//

ராகவன்,

ஒரு இந்திய முஸ்லிம் என்ற வகையில் எனது கருத்தை சொல்கிறேன். பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் கருத்தும் இவ்வாறுதான் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு அரசியல் பிரச்னை. மதம் இங்கு எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இந்த பிரச்னையில் எந்த முடிவு இந்தியாவிற்கு அனுகூலமாக இருக்குமோ அதைத்தான் நான் விரும்புவேன். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இந்திய முஸ்லிம்களெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதெல்லாம் தவறான, அடிப்படையற்ற வாதம். அப்படியானால் இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கிடையில் (ஈராக், குவைத்திற்கிடையில் ஏற்பட்டதுபோல..) பிரச்னை தோன்றினால் அந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த நாட்டை ஆதரிப்பார்கள்?
 
// பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான். //

இருக்கலாம் நல்லடியார். எனக்கும் கிரிக்கெட்டும் ஏழாம் பொருத்தம். ஆனால் என்னுடைய ஆவல் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்று இருந்தாலும், நன்றாக விளையாடுகின்றவர் வெற்றி பெறுவார்கள் என்பது நான் ஏற்றுக் கொண்ட பட்ட ஒன்று. விரும்பிய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமை யாருக்கும் உண்டு.

// விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்? //
இந்த விஷயத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு நடக்கிறது என்பதே எனது கருத்து. விளையாட்டை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும். மைதுனம் வரை வந்தால் கந்தல்தான் மிஞ்சும்.

// பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. //
இந்தக் கருத்தில் எனக்கு முழு சம்மதம் உண்டு. பர்தா விஷயத்திலும் சரி. காஷ்மீர் விஷயத்திலும் சரி. உங்களுக்கு முதல் விஷயத்தில் இல்லை என்று புரிகிறது. இதைப் பற்றி வேறொரு திரியில் கருத்திட்ட நினைவு. என்னைப் பொருத்த வரையில் இருக்கும் தட்ப வெட்ப நிலைக்குத் தக்க உடைகளை விரும்பிய விதத்தில் நாகரீகமாக அணிந்து கொள்ளும் உரிமை எந்தப் பெண்ணுக்கும் உண்டு. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹி ஹி நீங்கள் பாராட்டும் மேதாவிகளில் நானும் ஒருவன்.
 
சலாஹுதீன், என்னுடைய கேள்விகளை அறியாமையின் வினாக்கள் என்றே எடுத்துக் கொண்டு விடை சொல்கின்றீர்கள். மிக்க நன்றி. தெரிந்து கொள்வதற்காகக் கேட்பதுதான் எல்லாம். கேட்டால்தானே தெரியும்.

பாகிஸ்தான் இந்தியா பிரிவினை வெறும் அரசியல் பிரச்சனைதான். அதில் மதம் புகுந்து சீரழித்து விட்டது. என்ன செய்ய? இன்றைக்கு ஒருத்தரையொருத்தர் வெறுக்கும் நிலை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் கூடி வாழ்வதும் நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவுல் கொண்டு வா. இருவரும் ஊதி ஊதித் தின்போம் என்று இருக்கக் கூடாது.

இரண்டு முஸ்லீம் நாடுகளுக்கிடையே போர் என்று சொன்னீர்கள் அல்லவா. கிட்டத்தட்ட அப்படிப்பட்ட சூழ்நிலை ஆஸ்திரியாவிற்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டது. ஜெர்மனி மிகவும் இலகுவாக ஆஸ்திரியாவை வழிக்குக் கொண்டு வர...பல ஆஸ்திரியர்கள் வருத்தம் மட்டுமே கொள்ள முடிந்தது. Sound of Music என்ற திரைப்படம் இதைப் பின்னணியாக வைத்து வந்தது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அடடா! என்ன அருமையான இசைக் கோர்ப்பு.

சரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா? எதற்காக அப்படி ஒரு சட்டம்?
 
சரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா? எதற்காக அப்படி ஒரு சட்டம்?

ராகவன் அவர்களுக்கு!
மிக அவசியமாகத் தொழிலில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் கணனியின் தொடர்பு மிகக் குறைந்து எழுத்துப்பணி மிகவும் சுணங்கி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பழைய நிலையில் மீண்டும், தொடர்ந்து எழுத முடியும் என்று கருதுகிறேன் (இறைவன் நாடட்டும்)

இஸ்லாத்தில் பெண்களின் விவாகரத்து உரிமை பற்றி தலாக் ஓர் விளக்கம் என்ற அடுத்த பதிவில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். பெண்கள் விலகி வாழா ஆண்கள் அனுமதிக்க வேண்டும் என்பது தவறான புரிதலே தவிர அந்த நிலை இஸ்லாத்தில் இல்லை. தலாக் - விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது - உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.
 
கண்டிப்பாக அபு முஹை.. நீங்கள் விரைவில் எழுத வேண்டும். இறைவன் அருள் புரியட்டும். ஆனாலும் பணி பெரிது. அதற்குத்தான் முன்னுரிமை.

உங்கள் விளங்கங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
 
This post has been removed by a blog administrator.
 
அன்பின் ராகவன்,

கருப்பு துணியால் உடலை போர்த்தி முஸ்லிம் பெண்களெல்லாம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பிரமையே. உண்மையில் தனக்கு தோதான துணிகளில்தான் 'பர்தா' அணிந்து சாதாரணமாக இதர பெண்களைப் போல்தான் இருக்கிறார்கள். வேண்டுமென்றால் உங்கள் வீட்டுப் பெண்களை விட்டு ஏதாவது முஸ்லிம் பெண்ணிடம் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அவர்களும் இதைத்தான் சொல்வார்கள்.

சரிகைப்பட்டு துணிகளால் கிடைக்கும் அசெளகரியத்தை விட 'பர்தா' வினால் இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாம் பெண்களுக்கு 'வாழ்க்கைக்கு' அவசியமான எல்லா உரிமைகளையும் வழங்கியுள்ளது. ஒரு சில முஸ்லிம்கள் அவற்றை பெண்களின் மீது கடுமையாக சுமத்துகிறார்கள் அல்லது அத்தகைய முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமை எது என அறியாமல் இருக்கிறார்கள். என்பதே அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு காரணம்.

எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். 'பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை' என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா? மறக்காமல் கருத்திடவும்.
 
அருமையான விவாதங்கள்!
 
Dear All,
யார் மனமும் புண்படாமல் இங்கு விவாதம் சுமூகமாகச் செல்வதைப் பார்க்கிறேன். மகிழ்ச்சி.
ஒரு வேளை 'நேசமா'க வந்து (இஸ்லாம் மீது மட்டும்) வெறுப்பை கக்குபவர்களும் 'ஆரோக்கியமா'க வந்து அழுக்கைத் திணிப்பவர்களும் வராததால் இருக்கலாம்.

விவாதம் என்று வரும் போது உள்ளதை உள்ளபடி (வார்த்தை விளையாட்டு செய்யாமல்) அழகுற மொழிந்தால் எல்லோரும் நிறையத் தெரிந்துக்கொள்ளலாம். நட்பும் வளரும்.
 
//ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.//

ராகவன் அண்ணாவின் கருத்து சிந்தனையைத் தூண்டுகிறது.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவரவர் மதத்துக்கே இழுக்கு சேர்க்கிறார்கள் என்பதே உண்மை.
அது பின் லேடனோ புஷ்ஷோ மோடியோ பால் தாக்கரேயோ யாராக இருந்தாலும் சரி.

(ஆனால் பின்லேடன்களை காட்டியே ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஓரங்கட்டவும் மாபெரும் இஸ்லாம் மார்க்கத்தை குற்றஞ்சாட்டவும் மகிழ்வுடன் முன்வருகிறன ஃபாசிச சக்திகள்)

நம்மில் பலருக்கும் பின்லேடன் பயங்கரவாதியாக தெரிகிற அளவுக்கு 'மோடி'களும் 'தாக்கரே'க்களும் தெரிவதில்லை. காரணம் ஜனநாயகத் திரையைத் துளைத்துச் செல்லும் சக்தி 'பார்வைகளுக்கு' இல்லை.
 
I fully agree with this timely advice to the people who interested in debate or to know more about the ultimate islam, However We as muslims have huge responsibility to understand our religion thorougly to face any kind of questions and not only for argument but for to clear the misconceptions within us.It is very unfortunate islam nowadays portrayed as extremism by the west purposely, But Allah will answer for all the bushes and blairs soon and this world realize the true power of islam inshaallah. Till then all true believers bear all the critisizms for allah and as much as try explain to the people who really interested in islam.
 
ராகவன்,

Sound of Music பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. இங்கு கிடைக்கிறதாவென அவசியம் தேடிப்பார்க்கிறேன்.

உங்கள் கேள்விகளை தயங்காமல் இங்கு முன் வையுங்கள். உங்களுக்கு பதிலளிக்கும் சாக்கிலாவது நாங்களும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு தெரிந்து கொள்கிறோம். விளக்கங்கள் அளித்துவரும் அபூமுஹை மற்றும் நல்லடியாருக்கு நன்றிகள்!

ஜாபர் (சபாமர்வா), babu, pakru, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

- சலாஹுத்தீன்
 
// தலாக் - விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது - உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை. //

அபுமுஹை, ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா?

// எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். 'பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை' என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா? மறக்காமல் கருத்திடவும். //

நல்லடியார், அந்தத் தொடரை இன்னும் படிக்கவில்லை. படித்து விட்டு கருத்திடுகிறேன். நன்றி.
 
Dear Raghavan,

please read http://abumuhai.blogspot.com/2005/06/2.html
ABUMUHAI clearly explained the queries on divorces of muslim couples
 
சுட்டிக்கு மிக்க நன்றி பாபு.

பெண்களுக்கும் அந்த உரிமை இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஐயம். பெண்கள் குலா செய்ய விரும்பி தலைவரை (நீங்கள் இவருக்குக் கொடுத்த பெயர் மறந்து விட்டது. மன்னிக்கவும்.) சந்தித்து முறையிட்டால் நடக்கும். சரி. ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்? ஒருவேளை அந்தப் பெண்ணால் அந்தத் தொகையை (திருமணத்தின் போது பெற்றது) கொடுக்க முடியாவிட்டால்?

ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.

அன்புடன்,
கோ.இராகவன்
 
I think there is a good answer for Br.Raghavan's queries. Salahuddin or Abumuhai can explain better.
 
சலாஹுத்தீன் அவர்கள் பெயர்தான் முதலில், ராகவன் அவர்களின் சந்தேகங்களுக்கு அவரே விளக்கமளிக்க வேண்டும். நான் இடையில் சேர்ந்து கொள்கிறேன், நன்றி
 
திரு விச்சு அவர்கள் தன்னுடைய பதிவில் இஸ்லாம் குறித்த சில சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் சிறு விளக்கங்களை அளித்து இருக்கிறேன். என் விளக்கங்களில் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நான் மார்க்க அறிஞன் அல்லன்.
நன்றி
 
சரி, ராகவன் அவர்களின் சந்தேக வினாக்களுக்கு நாமே விளக்கமிளிப்போம்.

//*ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?*//

முதலிரண்டு முறை தலாக் சொல்லும் தவணைகளில் தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரைக் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அப்பெண்கள் - தங்கள் கர்ப்ப அறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை - குழந்தை உருவான விஷயத்தை மறைக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்களின் கணவர்கள் இந்தக் கெடுவுக்குள் தலாக் விடப்பட்டப் பெண்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். இது 2:228 குர்ஆன் வசனத்தின் கருத்தாகும்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் கருத்தரித்திருக்கிறார்களா என்பதை அறியவும், மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலவரையறைக்குள் கணவன், மனைவி இருவருக்கும் நல்லிணக்கம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். இது முதல் இரண்டு தவணை தலாக் முறைக்கு மட்டுமே பொருந்தும்.

தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் இவ்வாறு காத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

மற்ற சந்தேகங்களுக்கும் தொடர்ந்து விளக்கமளிப்போம் (இறைவன் நாடட்டும்) அதற்குமுன் ராகவன் அவர்கள் எழுதிய கருத்தோட்டத்தில் எனக்கு ஏற்படும் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கட்டும்.

//*ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.*//

''அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. சரியாக இருக்குமெனப் படுகிறது'' என்பதற்கு சரி, சரி இல்லை என்பதை எப்படிப் புரிய வேண்டுமென்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லுங்களேன் ராகவன்.

அன்புடன்,
அபூ முஹை
 
விளக்கங்களுக்கு நன்றி அபுமுஹை. நான் இதைப் பார்க்காமல் இருந்து விட்டேன். அதான் தாமதம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால்....ஒரு பெண் மணவிலக்கு கேட்கையில் ஒரு நடுவர் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. அது சரியே. காரணம் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க ஒரு நடுவர் தேவை. (இந்துத் திருமண விலக்குகளில் நீதிமன்றம் நடுவராக இருப்பது போல).

அதே போல ஒரு ஆணும் தன்னிச்சையாக தலாக்காமல்...ஒரு நடுவர் வழியாகவே செய்வதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால் இதை சிலர் துர்ப்பிரயோகம் செய்யவும் வழியுண்டு. ஆகையால் என்னுடைய கருத்துப் படி ஆணுக்கும் தன்னிச்சையாக தலாக்க உரிமை இருக்கக் கூடாது. நடுவர் வழியாகவே சாதக பாதகங்களை அலசிச் செல்ல வேண்டும். இதற்கு எதிராக இஸ்லாத் இருக்குமானால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அது தவறு என்றே எனக்குப் படுகிறது.

அடுத்த கேள்வி. ஒரு முஸ்லீம் பெண் மணவிலக்கிற்காக இந்திய நீதிமன்றங்களை நாடலாமா? அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?
 
ராகவன், உங்களின் சந்தேக வினாக்களுக்கு முதலில் பதில் எழுதிவிடுகிறேன்!

1.//*ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்?*// 2. //*திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா?*// இந்த இருண்டு கேள்விகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையதுதான்.

ஒரு பெண் தன் கணவனைப் பிடிக்காமல், அவனிடமிருந்து முற்றாக விலகிவிட முடிவு செய்து அந்தச் செய்தியை ஊர்த் தலைவரிடம் முறையிட்டால் - அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்து பலவந்தமாக அவளின் கணவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

இங்கே ஊர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவளது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை அப்பெண்ணின் மீது திணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் இவர்கள் மீது திருக்குர்ஆன் மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறது.

''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்தாம்.'' (5:44)

''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்.'' (5:45)

''அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.'' (5:47)

எனவே, ''தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்?'' என்ற பேச்சுக்கே இடமில்லை. கணவனிடமிருந்து மணவிலக்கை விரும்பி, தலைவரிடம் ஒரு பெண் முறையிட்டால் அத்தலைவர் மறு பேச்சுக்கே இடமில்லாமல் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். இதுவே இஸ்லாத்தின் சட்டம்.

இச்சட்டத்தை முறைகேடாக ஒருவர் பயன்படுத்தினால் அது அவரின் அறிவில்லாத் தன்மையையே வெளிப்படுத்தும். ஒரு முஸ்லிம் செய்யும் முறைகேடான செயலை, சட்டத்தை நோக்கித் திருப்புவது அறிவுடைமையல்ல என்பதை விளங்க வேண்டும். (ஏற்கெனவே தலாக் ஓர் விளக்கம்-1 பதிவில் இதை நாம் எழுதியுள்ளோம்)

''குலா'' மூலம் மணவிலக்குப் பெறும் முயற்சியில் பெண்ணுக்கு அநீதம் இழைக்கப்பட்டால் அவர் தாராளமாக இந்திய நீதி மன்றங்களின் உதவியை நாடலாம். இதைக் கூடாது என்று சில அறிவிலிகள் கூறுவார்கள், இது நியாயமற்ற விதண்டா வாதம். குலா முறை விவாகரத்து இஸ்லாம் வழங்கிய பெண்களுக்கான உரிமை, இந்த உரிமையை மறுத்து நிராகரித்தவர்களுக்கெதிராவே நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார்.

பெண்களுக்கான உரிமையை மறுத்தத் தனி நபரோ அல்லது சமுதாயமோ இவர்களே இஸ்லாத்தின் பார்வையில் கடுமையானக் குற்றவாளிகள். (எல்லா விஷயங்களையும் ஒரே பின்னூட்டத்தில் சொல்லாமல் தனித் தனியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி இன்னும் இரண்டு பின்னூட்டங்களில் சொல்லமென்று எண்ணுகிறேன். நன்றி!)

அன்புடன்,
அபூ முஹை
 
நன்றி அபுமுஹை....ஆனால் உங்கள் கருத்துகள் எனக்கு முழுமையான விடையைத் தரவில்லை.

குலா மூலம் ஒரு பெண் விவாகரத்து கோரினால் மறுக்கப் படவே மாட்டாது என்று உறுதி கூறியுள்ளீர்கள். அப்படி மறுக்கப் பட்ட சமயத்தில் நீதி மன்றத்தை நாடினால் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஆகையால் அதில் பேச்சை வளர்க்காமல் எனது கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

குலா எவ்வகையில் செய்யப் படுகிறதோ. அதே வகையில்தான் தலாக்கும் செய்யப் பட வேண்டும். தன்னிச்சையாக எந்த ஆணும் தலாக் செய்யக் கூடாது. அப்படி இருந்தால்தான் என் கருத்துப் படி சரி. இல்லையென்றால் தவறுதான். குற்றம்தான்.
 
ராகவன்! நீங்கள் அவசரப்பட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

தலாக், குலா இண்டுமே கணவன், மனைவி இருவரின் தன்னிச்சையாகவே நடக்கிறது. திருமணத்தின் போது ஊரறியப் பெற்றுக் கொண்ட மஹர் தொகையை, மணவிலக்குப் பெற நாடும் மனைவி அதே ஊரறிய மஹர் தொகையைத் திரும்ப செலுத்த வேண்டும். இந்தக் காரணத்துக்காகவே குலாவைத் தேர்ந்தெடுக்கும் மனைவி தலைவரிடம் தனது மணவிலக்கைப் பற்றித் தெரிவிக்கிறார் - வாங்கிய மஹரை தலைவரிடம் ஒப்படைக்கிறார். இதுதான் குலாவின் ஏதார்த்தம்.

இது தலைவரை நடுவராக ஏற்றுக் கொண்டதாகாது. இவர்களின் வாழ்க்கை ஓப்பந்தம் பதிவு செய்யப்பட்ட திருமணப் புத்தகத்தில், குலா மூலம் இத்திருமணம் ரத்தாகிவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக - அதுபோல் தலாக் சொல்லி தவணைகள் முடிந்து விவாகரத்து உறுதி செய்யப்பட்டால் கணவன் அதைத் தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். இதுவும் இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்ட புத்தகத்தில், தலாக் மூலம் இந்தத் திருமணம் ரத்தாவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக.

எனவே தலாக், குலா இரண்டிலும் நடுவர் என்பது கிடையாது - இனிமேல் சேர்ந்து வாழ இயலாது என்று பிரிந்திட முடிவுவெடுக்கும் கணவன், மனைவி இருவருமே தலாக் - குலாவை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இதில் நடுவராக எவரும் தலையிட முடியாது - தலையிடக்கூடாது.

இங்கு நாம் பரிசீலித்துக் கொண்டிருப்பது தலாக்கும், குலாவும் உரிமையில் சமமாக இருக்கிறதா? என்பதைப் பற்றி மட்டுமே. அதில் வேறுபாடு இல்லை என்பது தெளிவு.

பொதுவாக, எப்படி சட்டம் இயற்றினாலும் அது பற்றிய மனிதனின் சிந்தனையில் எழும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியாது. தலாக், குலாவுக்கு நடுவர் இருந்தால் நல்லது என்பது ராகவனின் கருத்து.

செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள நடுவரை ஏற்படுத்திக் கொள்வது ஓப்பந்த முறைக்கேப் புறம்பானது மட்டுமல்லாமல் தலாக், குலா சுதந்திரத்தை, நடுவர் என்ற பெயரில் மூன்றாவது மனிதரிடம் ஒப்படைப்பது தவறு என்பது என்னுடைய கருத்து.

//*ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை.*//

தலாக் பற்றிய உங்கள் கேள்விக்கு ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது!
 
சலாஹுத்தீன் அவர்களே, எனக்கு இங்கு சில சந்தேகங்கள் உண்டு. மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா. இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா? எது அதிகம்? மெஹரா வரதட்சிணையா? மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்